ADVERTISEMENT

கட்சி வேட்பாளர்களை தோற்கடித்த உடன் பிறப்புகள்!

11:53 PM Jan 13, 2020 | santhoshb@nakk…

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக பொறுப்பாளர்களே திமுக சேர்மன் வேட்பாளர்களை தோற்கடித்து சாதனை படைத்துள்ளர். தோற்ற சேர்மன் வேட்பாளர்கள் தலைமை வரை புகார் அனுப்பியதுடன் நேரில் சந்தித்து புகார் கொடுக்கவும் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT


அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் 3 ஒன்றியங்கள் இதில் 3 ஒன்றியங்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றது. மணமேல்குடி ஒன்றியத்தில் கடந்த தேர்தல்களைப் போலவே, இந்த தேர்தலிலும் திமுக முழுமையாக அனைத்து வார்டுகளையும் கைப்பற்றியது.

ADVERTISEMENT


சேர்மன் வேட்பாளராக பரணி கார்த்திகேயனையும் துணை சேர்மனாக ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமியையும் அறிவித்தது. அங்கு போட்டியின்றி சேர்மன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், துணை சேர்மன் பதவியும் அப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென மாஜி ஒன்றிய செயலாளர் சீனியார் வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்சி அறிவித்த சக்தி ராமசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்ய சீனியார் வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி கட்சி வேட்பாளரை பரணி கார்த்திகேயன் திட்டமிட்டு தோற்கடித்துவிட்டார் என்று மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி எம்.எல்.ஏவிடம் புகார் சொன்னதுடன் தலைமை கழகத்தில் புகார் கொடுக்க சென்னை சென்றுள்ளார்.


அதே போல ஆவுடையார்கோயில் ஒன்றியத்திலும் திமுக தான் சேர்மன் என்ற நிலையில் மகளிரணி அல்லிமுத்துவை வேட்பாளராக கட்சி அறிவித்தது. ஆனால் அதிமுக எம்எல்ஏ ரெத்தினசபாபதி, திமுக பரணி கார்த்திகேயன் தரப்பினர் மற்றொரு திமுக கவுன்சிலரான உமாதேவி என்பவரை சேர்மன் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்து திமுக கட்சி அறிவித்த வேட்பாளரை தோற்கடித்ததுடன் துணைத் தலைவர் பதவியும் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது. இதில் பாதிக்கப்பட்ட மகளிரணி அல்லிமுத்துவும் கட்சி வேட்பாளரை தோற்கடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.


இப்படி தான் கந்தர்வகோட்டை, அன்னவாசல், ஒன்றியங்களிலும் புதுக்கோட்டை மாவட்டக்குழுவிலும் திமுக கட்சி அறிவித்த சேர்மன் வேட்பாளர்களை திமுகவினரே தோற்கடித்து சாதனை படைத்து உடன் பிறப்புகளை வேதனைப்பட வைத்துள்ளனர்.


இந்த நிலையில் தான் ஆவுடையார்கோயில் ஒன்றிய சேர்மன் திமுக உமாதேவி அதிமுக எம்.எல்.ஏ ரெத்தினசபாபதியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT