நாளை மறுநாள் (11.01.2020), தமிழகத்தில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisment

LOCAL BODY INDIRECT ELECTION DMK PARTY CHENNAI HIGH COURT

தேர்தலில் அதிமுகவினர் முறைகேடுகள் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது என்று திமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை வீடியோ பதிவு செய்யக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு ஆயத்தமாகி வரும் நிலையில், மனுவைத் தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர். இதனையடுத்து திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment