ADVERTISEMENT

‘தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும்’ - போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

05:53 PM Feb 10, 2024 | mathi23

சென்னை, பூவிருந்தவல்லி அருகே பாப்பான்சத்திரம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இங்கு படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த பள்ளியில், தலைமை ஆசிரியராக கார்த்திகா பொறுப்பு வகித்து வருகிறார். இவர் அடிக்கடி விடுப்பு எடுப்பதாகவும், கணக்கு பாடத்தை முறையாக கற்றுத் தராததாகவும் கூறட் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்கள் பள்ளி முன்பாக, ‘மாற்ற வேண்டும மாற்ற வேண்டும் தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும்’ என்று கூறி கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் மாணவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த ஊராட்சி நிர்வாகமும், அங்கு இருக்கக்கூடிய பெற்றோர் ஆசிரியர் கழகமும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அப்போது, தலைமை ஆசிரியரை மாற்றாவிட்டால் மாணவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் எனவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை ஏற்று அவர்களை சமாதானப்படுத்திக் கலைந்து போகும்படி அதிகாரிகள் தெரிவித்ததால் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT