ADVERTISEMENT

மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிமுக குமரகுரு...

01:16 PM Sep 20, 2019 | Anonymous (not verified)

கடந்த ஜனவரி 8ந் தேதி விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அறிவித்து உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணைநல்லூர் அரசூர், மடப்பட்டு, திருநாவலூர், திருக்கோவிலூர், முகையூர் ஆகிய பகுதிகள் விழுப்புரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் முதல் 25 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த ஊர்பகுதிகள் விழுப்புரத்துடன் ஒட்டி உள்ளதால் 10 நிமிட பயணத்தில் சென்று வரும் நிலையில் உள்ளது. இந்தப் பகுதிகளை கள்ளக்குறிச்சியுடன் இணைத்தால் 100கிமீ தூரம், ஒருநாள் பயண நேரம் ஆகும். இதனால் மக்களின் எதிர்கால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகிவிடும் என்பதனால் இந்த பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைக்க வேண்டாம். விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்பு இருக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம், மனித சங்கிலி கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பிரச்சாரம், கருத்துக்கேட்பு கூட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விழுப்புரம் வேண்டுமென்று மனு கொடுத்தும் கலெக்டர் அமைச்சர் முதலமைச்சர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் கோரிக்கை வைத்தும் இந்தப் பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டி கடந்த 8மாதமாக இப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ADVERTISEMENT


அரசின் கொள்கை ரீதியாக மக்கள் நலன் கருதி ஒரு புதிய மாவட்டம் மாவட்டத்தின் தலைநகர் அருகே உள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து மக்கள் வசதிக்காகவும் அரசின் நிர்வாகம், வருவாய்துறை, சுகாதாரம், மின்வசதி, ஊரக வளர்ச்சி துறை, சாலை போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சிறப்பாக செய்யவும் மக்கள் வசதிக்காகவே புதிய மாவட்ட தலைநகர் உருவாக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து கடந்த 1993ல் தனிமாவட்டமாக உருவானது. 11 சட்டமன்ற தொகுதி, 9ட்டங்கள் 22ஊராட்சி ஒன்றியம் கொண்ட மாவட்டமாகும்.


கல்வராயன்மலை பகுதி மக்கள் விழுப்புரம் தலைநகர் செல்ல 100கி.மீ தூரம் ஒருநாள் பயணதூரம் ஆகிறது. தற்போது அதே நிலைதான் விழுப்புரம் தலைநகர் அருகே உள்ள பேரங்கியூர், இருவேல்பட்டு, அரசூர், காரப்பட்டு, பொய்கையரசூர், டி.குமாரமங்கலம், மேல்தணியாலம்பட்டு, ஆனத்தூர், சேமங்கலம், ஆலங்குப்பம் கிராமம், கீரிமேடு, அரும்பட்டு, மாமந்தூர், காந்தலவாடி, கருவேப்பிலைபாளையம், மடப்பட்டு, சிறுத்தனூர், சிறுளாப்பட்டு, திருநாவலூர், கெடிலம், மேட்டத்தூர், பரிக்கல், குவாகம், பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், சிறுவானூர், ஏனாதிமங்கலம், மாரங்கியூர், பையூர், பை.சேத்தூர், சிறுமதுரை, சித்திலிங்கமடம் மற்றும் திருக்கோவிலூர் பகுதி மக்கள் இங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கள்ளகுறிச்சிக்கு செல்லும் அவலம் வரும். கள்ளக்குறிச்சியுடன் இணைக்கும் போது மக்கள் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பெரும் தடையாகவும். கள்ளக்குறிச்சியுடன் இப்பகுதிகளை இணைப்பது மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலாகும்.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர், ஏனாதிமங்கலம், பை.சேத்தூர், மாரங்கியூர், அரசூர், ஆனத்தூர், மடப்பட்டு, கெடிலம், திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், திருக்கோவிலூர், முகையூர் ஆகிய பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் தொடந்து இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

இதுபற்றி திருவெண்ணய் நல்லூர் ஒன்றிய மக்களின் மனநிலை என்ன என்பதை அவர்களிடமே கேட்டோம். கடந்த ஜனவரி மாதம் முதல் எங்கள் பகுதியை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க கூடாது என்பதற்காக போராடி வருகிறோம் அரசும் அதிகரிகளும் மெளனமாகவே உள்ளனர் எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு தரவில்லை என்கிறார் அரும்பட்டு மணிகண்டன். மாவட்டம் பிரிப்பது மக்கள் வசதிக்காகத் தான் அதே நேரத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் எங்கள் மாவட்ட தலை நகரமான விழுப்புரம் உள்ளது அதை விடுத்து 100 கிலோ மீட்டர் தூரமுள்ள கள்ளக்குறிச்சியில் இணைக்க பார்க்கிறார்கள் அதிகாரிகள். இதற்காக பல போராட்டங்கள் நடத்தியும் கூட எதையும் கண்டுகொள்ளாமல் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள் இதில் அரசியல் உள்நோக்கமும் உள்ளது எனவே எங்கள் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன அவை திருக்கோவிலூர் - உளுந்தூர்டேட்டை தாலுக்காவில் உள்ளன அவைகளை ஒருங்கிணைத்து திருவெண்ணைநல்லூரை தனி தாலுக்கா வாகஅறிவிக்க வேண்டும் அது வரை எங்கள் போராட்டங்களை தொடர்வோம் என்றார் முருகன்.

இதில் என்ன அசியல் உள்நோக்கம் உள்ளது என விழுப்புரம் மாவட்ட இணைப்பு குழுவில் உள்ள வழக்கறிஞர் சோலையப்பனிடம் கேட்டோம். எங்கள் பகுதி விழுப்பு ரத்துடன் தான் தொடர வேண்டும் என கடந்த ஜனவரி முதல் 2700 புகார்மனுக்கள் அனுப்பியுள்ளோம். 3000 அஞ்சல் அட்டை புகாரும் கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றியும். மனித சங்கிலி, என பல போராட் டங்கள் நடந்துள்ளன இதற்க்காக எங்கள் குழுவினர்15 பேர் மீது காவல்துறைவழக்கும் போட்டுள்ளது அது மட்டுமா? தொகுதி திமுக எம் எல் ஏ பொன்முடி யிடம் புகார் மனு, அதிமுக ம.செ.வும் எம்எல்ஏவுமான குமரகுருவிடம் புகார் மனு, முதல்வரின் மிக நெருங்கிய நண்பர் வேறு மேலும் மாவட்ட மந்திரி சண்முகத்திடம் மனு, இப்படி தொடர் மனு தொடர்போராட்டத்திலும்முயர்ச்சியிலும் உள்ளோம்.

ஆனால் யாருமே உரிய பதிலை சொல்லவில்லை. இதற்கு காரணம் அரசியல் உள்நோக்கம். குமரகுரு கட்சியின்மாவட்ட எல்லையிலும் அவர் எம்எல்ஏவாக உள்ள உளுந்தூர்பேட்டை பகுதி கிராமங்கள் பல இதில் உள்ளன. அதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைப்பதில் அவர் விருப்பமாக உள்ளார். தி மு க பொன்முடியோ பிப்ரவரி 6ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட பிரிவினை ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது, மக்கள் கருத்தை கேட்டு அதன் படி மாவட்டதலைநகரத்தின் அருகாமையில் உள்ள பகுதிகளை விழுப்புரத்தோடு இணைக்க வேண்டும் மக்கள் விருப்பத்திற்க்கு மாறாக அதிகாரிகள் செயல்பட கூடாது என்றார். அதன் பிறரு இந்த பிரச்சினையில் பொன்முடி ஆர்வம் காட்டவில்லை என்கிறார் சோலையப்பன்.

கள்ளக்குறிச்சியோடு இணைவது பற்றி சீரியசாக எடுத்து கொள்ளவில்லை. இவரிடம் மனு கொடுத்தபோது நான் சொன்னால் எந்த அதிகாரியும் கேட்பதில்லை என்கிறார் சலிப்புடன். மக்களின் பல பிரச்சினைகளுக்கங்க மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளார் போராட்டமும் நடத்தியுள்ளார் நடத்திய பொன்முடி. இதை மட்டும் கண்டுகொள்ளாமல் தட்டி கழிக்கிறார் அதிமுக குமரகுரு - இதில் அரசியல் ஆதாயம் காண முயலுகிறார் என்கிறார் காட்டமாக சோலையப்பன் - இது ஒரு பக்கம் என்றால் பிப்ரவரி 6ல் நடந்த ஆலோசனை கூட்டத்தில் திருநாவலூர் பகுதியை சேர்ந்த 2000 பேர்கள் எங்கள் பகுதி விழுப்புரத்திலேயே இருக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்ஆனால் இப்போது திருநாவலூர் ஒன்றியத்தை கள்ளக்குறிச்சியில் சேர்க்க வேண்டும் என்று பல கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாவட்ட பிரிவினை மக்களிடையேயும் அரசியல்வாதிகளிடமும் பல பிரிவினைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகளா? அதிகாரிகளா?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT