ADVERTISEMENT

இதுதான் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி.... பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

09:09 PM Feb 23, 2020 | kalaimohan

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை, ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு சில நாள்களுக்கு முன்பு அறிவித்தது.

மேலும், அவருடைய பிறந்த நாளான பிப். 24ம் தேதியன்று, அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சுற்றிறிக்கை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT



சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள உறுதிமொழி:


இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன். எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன்.

ADVERTISEMENT



இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன். குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். நான், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன்.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு, அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT