ADVERTISEMENT

ஆண்டிப்பட்டி யூனியன் கூட்டத்தில்  கூச்சல், குழப்பம்..! 

10:39 AM Jul 24, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுவின் வழக்கமான கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். குறிப்பட்ட நிதியில் இருந்து மன்ற அனுமதி நோக்கி செலவு தொகை எடுப்பதற்கான மன்ற அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வளர்ச்சித் திட்டத்திற்கு என்று எந்தத் தொகையும் ஒதுக்கீடு செய்யவில்லை என்று திமுக கவுன்சிலர்கள் ராஜாராம், வைரமுத்து உள்பட பெண் கவுன்சிலர்களும் கேள்வி எழுப்பினர். இதனால் கூச்சல் குழப்பம் எற்பட்டது.

உடனே ஒன்றியக் குழு தலைவரான அதிமுகவைச் சேர்ந்த லோகிராசன், “நான்தான் தலைவர், நான் எடுப்பதுதான் முடிவு” என்று கூறி அரங்கத்தைவிட்டு வெளியேறினார். இதனால் திமுக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தலைவருக்கு எதிராகவும், அவருக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். மேலும், உயரதிகாரிகள் வரும்வரை அரங்கத்தைவிட்டு வெளியேறாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு கவுன்சிலர்களிடம் பேசி அவர்களை சமரசம் செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT