dindigul seenivasan speech

பொய்களைக் கூறி மக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றுவதாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

திண்டுக்கல்லில் அதிமுக மேற்கு மாவட்ட வடக்குப்பகுதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்குவடக்குப்பகுதி செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அமைப்புச்செயலாளர் மருதராஜ் முன்னிலை வகித்தார்.

Advertisment

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் சீனிவாசன், "கரோனாவால்பாதித்த மக்கள் பொங்கல் கொண்டாட ரேஷன் கடையில் 2,500 ரூபாய் பரிசாக வழங்க முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே, லோக்சபா தேர்தலில் விவசாயமற்றும்கல்விக் கடனைத் தள்ளுபடி செய்வதாக ஸ்டாலின் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றினார்.அதனால், அப்போது திமுக 38 இடங்களை வென்றது. நீட் தேர்வு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது திமுக ஆட்சி வந்தால் எப்படி ரத்துசெய்ய முடியும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு திமுக ஆதரவு அளித்தது. தற்போது தேர்தலுக்காக ஸ்டாலின் எதிர்க்கிறார்" என்றார்.