ADVERTISEMENT

நீதிபதிகளின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்த ஏழை நரிக்குறவர் குடும்பத்தினர்!

01:07 PM Sep 13, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உளுந்தூர்பேட்டை நகரில் உள்ளது நரிக்குறவர் காலனி. இங்கு வசித்துவந்தவர் 65 வயது சவுரியன். இவர் பாசி மணி, ஊசி மணி விற்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி உளுந்தூர்பேட்டை மேம்பாலம் அருகே ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சவுரியன் மீது மோதியுள்ளார். இதில் சவுரியன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் சவுரியன் இறப்பிற்கு நஷ்டஈடு கேட்டு கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்திவந்துள்ளனர்.

இந்த வழக்கு கடலூர் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஜவஹர் தலைமையில் நேற்று (12.09.2021) நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி புவனேஸ்வரி, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செந்தில்குமார், தொழிலாளர் நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபா அன்புமணி, மகிளா நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி, எஸ்சி/எஸ்டி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகர், சிறப்பு சார்பு நீதிபதி இருதயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம் வரவேற்றார். இதில் வக்கீல் சங்கத்தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் சம்பத்குமார், லாயர் அசோசியேஷன் தலைவர் சிவராஜ், மூத்த வழக்கறிஞர் அருளப்பன் சித்ரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வழக்கில் இறந்த சவுரியன் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதற்கான தீர்ப்பு உத்தரவினை மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா முகுந்தன் ஆகியோர் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நரிக்குறவ இன குடும்பத்தினர், விபத்து நடந்த ஒரு ஆண்டில் இழப்பீடு தொகை கிடைத்தது மிகப்பெரும் உதவியாக உள்ளதாக கூறி நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தனர்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT