ADVERTISEMENT

பொங்கல் கொண்டாடிய யானைகள்

12:16 PM Jan 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி எம்.ஆர். பாளையத்தில் இயங்கி வரும் யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது எட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தில் பொங்கல் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இங்கு பராமரிக்கப்பட்டு வரும் யானைகளை இப்பொங்கல் விழாவையொட்டி, மாலை அணிவித்து சிறப்பாக அலங்கரித்திருந்தனர். மேலும், அங்கு பொங்கல் வைத்து விழாவைச் சிறப்பித்தனர்.

இந்தப் பொங்கல் விழாவில் யானைகளுக்குப் பிடித்த கரும்பு உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனையும் நடத்தினார்கள். பின்னர் வன அலுவலர்கள் கரும்பு, பொங்கல், பழங்கள் உள்ளிட்டவற்றை யானைகளுக்கு வழங்கினார்கள். அதை யானைகள் உற்சாகத்துடன் சாப்பிட்டு பொங்கல் விழாவைக் கொண்டாடின. மேலும், இதில் யானைகளைப் பராமரிக்கக்கூடிய பாகன்களுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

இந்தப் பொங்கல் விழாவில் மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதீஷ், திருச்சி மாவட்ட வன அலுவலர் ஆகியோர் மற்றும் எம்.ஆர்.பாளையம் உதவி வனப்பாதுகாவலர் சம்பத்குமார், வனச்சரகர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT