ஸ்டேட் பாங்க் கிளார்க் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு பொங்கல் அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழர்களின் திருநாளான பொங்கலன்று தேர்வை நடத்தாமல் மாற்று தேதியில் நடத்த வலியுறுத்தி பாரத ஸ்டேட் பாங்கு (எஸ்பிஐ) சென்னை வட்டார தலைமையகத்தை மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.