ADVERTISEMENT

மோடிக்கு போலீஸ் காட்டிய கருப்புக்கொடி? -சிவகாசியில் சிரிப்போ சிரிப்பு!

11:33 PM Apr 12, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ராஜபாளையம் சேத்தூர் சேவுகபாண்டிய அரசு மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணிக்காக வந்திருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருப்பு பேட்ஜ் அணிந்து, மத்திய அரசுக்கு எதிராக நடத்திய இந்த ஆர்ப்பட்டத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
சிவகாசி தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்தும் கருப்புக்கொடி ஏற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT


‘திரும்பிப் போ.. திரும்பிப்போ.. மோடியே திரும்பிப் போ! தமிழகத்தை விட்டு திரும்பிப் போ!’ என்று என்று தோழர்கள் கோஷம் எழுப்பியபோது, போலீஸ்காரர் ஒருவர் கையில் கருப்புக்கொடியோடு நின்றுகொண்டிருந்தார். சீருடை அணிந்திருந்தாலும், உணர்வோடு பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுகிறாரே என்று வியப்போடு பார்த்தார்கள் மக்கள். தோழர்களுக்கும் ஆச்சரியம்!


அந்தப் போலீஸ்காரரோ, “அட, போங்கப்பா.. இங்கே டூ வீலரில் கருப்புக்கொடி கட்டியிருந்தார்கள். அப்புறப்படுத்துவதற்காக, கயிறை அவிழ்த்துக் கருப்புக்கொடியைக் கையில் எடுத்தேன். என் கடமையைச் செய்தேன். உடனே, பிரதமர் தமிழகத்துக்கு வருவதை தமிழ்நாடு போலீஸே எதிர்க்குதுன்னு சொல்லுறதுக்கு துடிக்கிறீங்களே! என் வேலைக்கு உலை வச்சிடாதீங்க!” என்று புலம்பினார்.


அப்போது ஒரு பொதுஜனம் “போலீஸ் காட்டிய கருப்புக்கொடின்னு கொட்டை எழுத்துல போடுங்க!” என்று கத்த, அந்தப் போலீஸ்காரர் வெலவெலத்துப் போனார். கத்தியவரோ, சிரிப்பாய் சிரித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT