Skip to main content

பிரதமர் மோடியின் தாடி ரகசியம்! 

The secret of Prime Minister Modi's beard

 

பிரதமர் மோடியின் முகத்துக்கு எப்போதும் அந்த வெள்ளை நிற தாடிதான் அழகு ! அந்த தாடி அவருக்கு ஒரு கம்பீரத்தைத் தரும் ! அதனை ட்ரிம் பண்ணி அழகாக வைத்திருப்பதில் அதிக கவனமாக இருப்பார் மோடி என பாஜக தலைவர்கள் சொல்வது உண்டு ! ஆனால், சமீபகாலமாக அவரது முகத்தில் நீண்டு வளர்ந்திருக்கிறது வெள்ளை நிர தாடி!  ட்ரிம் பண்ணி நீளத்தை குறைக்காமல் அவர் வைத்திருப்பதைக் கண்டு தமிழக பாஜகவினர் வியப்பாக பேசிகொள்கிறார்கள்.

இதன் ரகசியம் குறித்து விசாரித்தபோது,’’ பிரதமருக்கு சிகை அலங்காரம் செய்ய 5 நாவிதர்கள் இருக்கின்றனர். இவர்கள் ஷிப்ட் கணக்கில் பணி புரிந்து வருகின்றனர். அண்மையில் அதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், 5 பேரையும் பணிக்கு வராமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் கடந்த 2 வாரங்களாக அவர்கள் பணிக்கு வருவதில்லை. இந்த நிலையில், மோடியின் வெள்ளை நிற தாடி நீண்டு வளர்ந்ததால், அதுவும் அவருக்கு வேறு வித ஒரு கம்பீரத்தைத் தந்துள்ளது. இதனைப் பார்த்த பிரதமரின் செயலாளர்கள், ‘ நீண்டு வளர்ந்துள்ள தாடியில் உங்களைப் பார்க்கும் போது வங்கத்து கவிஞர் ரவீந்திரநாத் தாகூரைப் பார்ப்பது போலிருக்கிறது. இதுவும் ஒருவித அழகைத் தருகிறது ‘ என புகழ்ந்துள்ளனர். அதனால் சில நாட்களுக்கு இப்படியே இருக்கட்டுமே என மோடியும் நினைத்ததால், தாடியை ட்ரிம் செய்து நீளத்தைக் குறைப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் மோடி! ‘’ என தாடியின் ரகசியத்தைச் சொல்கிறார்கள் தமிழக பாஜகவினர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்