ADVERTISEMENT

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் ஒத்திகையால் பரபரப்பு..!

03:29 PM Jan 27, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

குடியரசு தினத்தன்று இந்தியா முழுவதும் விவசாயிகள் ட்ராக்டர் பேரணி மூலம் போராட்டம் செய்ய முடிவுசெய்திருந்தனர். காவல்துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். நாகையில் நடக்கவிருக்கும் போராட்டத்தை முடக்க மாவட்டக் காவல்துறை சார்பில் போராட்ட தடுப்பு ஒத்திகை நடத்தியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் ட்ராக்டர் பேரணி நடைபெறும் என அறிவித்திருந்தனர். ட்ராக்டர் பேரணிக்கு நாகை மாவட்டக் காவல்துறை தடை விதித்துள்ளது. காவல்துறையின் தடையை மீறி போராட்டம் நடைபெற்றால் அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெற்றது.

நாகை புத்தூர் ரவுண்டானா அருகில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் விவசாயிகள் வேடமிட்டவர்கள் ட்ராக்டருடன் போராட்டத்தில் ஈடுபடுவது போன்றும், அதனை போலீசார் தடுத்து, அவர்களை கைது செய்வது போன்றும் தத்ரூபமாக ஒத்திகை நடைபெற்றது. இந்தப் பாதுகாப்பு ஒத்திகையில் சட்ட ஒழுங்கு போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் என நூற்றுக்கும் மேற்பட்டோர் வஜ்ரா கலவர தடுப்பு வாகனத்துடன் கலந்துகொண்டனர். இந்த ஒத்திகை காரணமாக நாகை வேளாங்கண்ணி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT