ADVERTISEMENT

முக்கிய இடங்களில் சோதனை: மோப்ப நாய் உதவியுடன் களத்தில் இறங்கிய காவல்துறையினர்!

12:40 PM Jan 25, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

இந்திய நாட்டின் 73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வருகின்ற 26ஆம் தேதி இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அதிகம் நடமாட கூடிய இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த அவகையில் பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், முக்கிய ரயில்வே சந்திப்புகள் அனைத்திலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திருச்சியில் இருந்து காரைக்கால் வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்ட காவல் குழுக்கள் இணைந்து பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில்வே ஜங்ஷனில் உள்ள இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடங்கள், சரக்கு கையாளக்கூடிய பகுதிகள், பயணிகள் இருக்கக்கூடிய நடைமேடைகள் உள்ளிட்டவற்றில் சோதனைகள் செய்யப்படுகிறது. அதோடு எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் பயணிகளின் உடைமைகளை மோப்ப நாயின் உதவியோடு சோதனை செய்தனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு குழுக்களும் பெட்டிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT