ADVERTISEMENT

பொது மக்களை மடக்கிப்பிடித்து வழக்குப் போடும் காவல்துறையினர்..!

10:09 AM Apr 15, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வீச தொடங்கிய நிலையில், தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் அதில் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

அதனால் தமிழகம் முழுவதும் காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தி வலியுறுத்தி வருகின்றனர். காவல்துறையினர் சாலைகளில் ஆங்காங்கே நின்று, இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், முகக் கவசம் அணியாமல் வரக்கூடியவர்களுக்கு அபராதம் விதித்து, அவர்களை முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று எச்சரித்தும் அனுப்புகின்றனர். அதிலும் திருச்சி மாவட்டத்தில், மாநகர பகுதிக்குள் சுமார் 14 இடங்களில் காவல்துறையினர் ஆங்காங்கே குழுவாக நின்று வாகன ஓட்டிகளை முகக்கவசம் அணிய வலியுறுத்தி, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த 10ஆம் தேதி முதல் நேற்றுவரை மொத்தம் 1,174 பேர் மீது முகக் கவசம் அணியாமல் வந்தது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதது என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், முகக் கவசம் அணியாமல் வந்த நபர்களிடமிருந்து சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்த 67 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தொடர்ந்து அபராதம் விதித்து வருவதால், பொதுமக்கள் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் முகக் கவசங்கள் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT