ADVERTISEMENT

போலீசார் அபராதம் வசூல்... வழக்குப்பதிவு...! லாரி உரிமையாளர்கள் புலம்பல்!

09:38 AM Jan 12, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, சரக்கேற்றிச் செல்லும் லாரிகளை மடக்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வதால், தொழில் பாதிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் தனராஜ், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது; லாரி தொழில் கரோனா காலத்தில் மிகவும் சிரமத்தில் இயங்கிக் கொண்டு வருகிறது. தற்போது கரோனா மூன்றாவது அலையின்போதும் கூட அரசின் முறையான வழிகாட்டுதலின்படி, லாரி ஓட்டுநர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், வாகனங்களை தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இயக்கி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்வதற்கு அரசு அனுமதி அளித்து உள்ளது. எனினும், நோய்த்தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஒரு சில இடங்களில் காவல்துறையினர் வாகனத்தை வழிமறித்து ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் வசூலிக்கின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, லாரி தொழிலுக்கும், ஓட்டுநர்களுக்கும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தங்குதடையின்றி கரோனா காலத்தில் லாரிகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT