
சுங்கச்சாவடியில் லாரியின் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்த ஊழியர் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்டத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு, சிவகாசியை நோக்கிச் சென்ற லாரி கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணத்திற்காக நிறுத்தப்பட்டது. அந்த லாரியின் முன்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஃபாஸ்டேக் ஸ்கேன் ஆகாததால் பணியில் இருந்த சுங்கச்சாவடி ஊழியர் கையில் இருந்த கையடக்க இயந்திரத்தின் மூலம் லாரியின் முன்பகுதியில் நின்று ஸ்கேன் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த கனரக லாரி நின்றுக் கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியதில் முன்னால் நின்றுக் கொண்டிருந்த ஊழியர் மீது லாரி பாய்ந்தது.
இதில், சுங்கச்சாவடி ஊழியர் தினேஷ் தலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.