ADVERTISEMENT

20% இட ஒதுக்கீடு: பா.ம.க.வின் மாநகர ஆணையரிடம் மனு அளிக்கும் போராட்டம்..!

03:26 PM Jan 07, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க.வினர் இன்று (07/01/2021) திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், வருவாய் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று (07/01/2021) திருச்சியில் பா.ம.க. சார்பில், மாநில துணை பொதுச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில், கிழக்கு மாவட்ட மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் உட்பட 100-க்கும் மேற்பட்டோர், நீதிமன்றம் அருகிலுள்ள வ.உ.சி. சிலையில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு திருச்சி மாநகர ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவை அளித்தனர்.

இதில் மாநில துணைத்தலைவர் உமாநாத், மாவட்ட தலைவர் வினோத், கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT