ADVERTISEMENT

பிளாஸ்டிக் ஒழிப்பு என்கிற போர்வையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக சிறு, குறு வியாபரிகளை ஒழிக்கிறார்கள் ! பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துமாணிக்கம்

03:02 PM Jan 03, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகப்படுத்துவதைத் தடுக்கவும், மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருள்களை அழிக்கவும் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகப் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ல் திருத்தம் மேற்கொண்டு, வரும் 26-ம் தேதி முதல் 50 மைக்ரானுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் கேரி பேக்குகள், ஒருமுறை பயன்படுத்தும் டீ-கப்கள், தெர்மாகூழ் கப்கள், தட்டுக்கள் போன்றவை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவற்றைப் பயன்படுத்துவது தடைசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

2017, 2018 என ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இதே விதமான அறிவிப்பை வெளியிடுவார்கள். அதன் பிறகு இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் இருக்காது. இந்த நடவடிக்கை எல்லாம் ஸ்மார்ட் சிட்டிக்கான வளர்ச்சியைக் குறித்தே வெளியிடப்படப்பட்டது. ஆனால் தற்போது இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் தடை என்பது உறுதியாக நடவடிக்கை என்கிற நிலை உள்ளது. அதனால், தி்ருச்சியில் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் காலவரையற்ற விடுமுறை அறிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து திருச்சி புதுக்கோட்டை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துமாணிக்கம் திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் இந்திய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பினால் 11 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புப் பறிபோகியிருக்கிறது. ஆறு மாதத்திற்கு முன்பு பிளாஸ்டிக் தொழிற்சாலையினால் எந்தக் கேடும் இல்லை என்று சான்றிதழ் கொடுத்துவிட்டு அடுத்த ஆறு மாதத்திற்குள் தடை வித்தித்திருப்பது சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதரத்தை நசுக்குவது போன்று உள்ளது. நாங்கள் சென்னையில் கருப்பு கொடி ஏந்தி உண்ணாவிரதம் இருந்து பார்த்தோம். ஆனால் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. தமிழக அரசின் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டத்திற்கும் எங்களை அழைக்கவில்லை.

சுற்று சூழலுக்கும், இயற்கைக்கும், மரங்களுக்கும் எந்த வகையிலும் கேடு செய்யதா பிளாஸ்டிக் தொழிலை தடை செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த வகையில் வேண்டுமானாலும் உபயோகித்திவிட்டு மறு சுழற்சி செய்ய வாய்ப்பு இருக்கும் பிளாஸ்டிக்கினால் கேடு விளைகிறது என்று சொல்வதில் நியாமில்லை.

வளர்ந்த நாடுகளில் 1 தனிநபர் ஏறக்குறைய 1 ஆண்டுக்கு 100 கிலோ பிளாஸ்டிக் உபயோகப்படுத்துகிறார்கள். இந்தியாவில் 1 தனிபர் 1 ஆண்டுக்கு 10 கிலோதான் பயன்படுத்துகிறார். இந்த அளவு உபயோகத்திற்கே பிளாஸ்டிக் ஒழிப்போம் என்கிறார்கள்.

ஜி.எஸ்.டி, மின்கட்டணம் மூலம், ஒர் ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கொடுக்கிறோம். தற்போது தமிழகம் முழுவதும் சிறு, குறு வியாபாரிகள் பயன்படுத்தும் மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் மட்டும் தடைசெய்யப்பட்டுப் பறிமுதல் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் மறு சுழற்சி செய்ய முடியாத பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் எதையும் தடைசெய்யாமல் இருப்பதுதான் தற்போது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறு, குறு வியாபாரிகளைப் பிளாஸ்டிக் ஒழிப்பு என்கிற போர்வையில் அழித்துவிட்டு, பன்னாட்டுப் பொருட்களை விற்பனைக்காக இதை பண்ணுகிறார்ளோ என்கிற சந்தேகம் வலுக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT