ADVERTISEMENT

அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்திற்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் ஆதரவு!

09:12 PM Jul 25, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களுக்கு, கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சி மருத்துவர்களின் பணிகால ஊதியம் ரூபாய் 21,600 வழங்காமல் வெறும் ரூபாய் 3,000 மட்டுமே வழங்கியது. இதையும் கடந்த 8 மாத காலமாக வழங்காமல் உள்ளனர்.

இதனால் பயிற்சி மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சி மருத்துவர்களின் பணிகால ஊதியத்தை, இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த ஜூலை 23- ஆம் தேதி அன்று முதல் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 200- க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல் ஒவ்வொறு நாளும் நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மூன்றாவது நாளான இன்று (25/07/2021) சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்து, போராட்ட களத்தில் சங்கத்தின் பொது செயலாளர் ரவீந்திரநாத் மற்றும் பொருளாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிட்ம் பேசிய ரவீந்திரநாத், கடந்த 2013- ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை தமிழக அரசு சிறப்பு சட்டம் மூலம் முழு கட்டுபாட்டில் எடுத்து நிர்வகித்து வருகிறது. அரசு கட்டுபாட்டில் வந்த பிறகும் மாணவர்களின் கல்வி கட்டணம் அரசு கட்டணமாக வசூலிக்கவில்லை. இதற்கு மாணவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பயிற்சி மருத்துவர்களின் பணிகால ஊதியம் ரூபாய் 3,000 மிகவும் குறைந்த அளவு வழங்கப்படுகிறது. மற்ற அரசு மருத்துவகல்லூரியில் ரூபாய் 21,000- க்கு மேல் வழங்கபடுகிறது.

இவர்கள் கரோனா காலத்தில் உயிரைத் துச்சமென மத்தித்து பணியாற்றியுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று அப்போதே முதல்வர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இதனை உடனடியாகத் தீர்க்க வேண்டும். தி.மு.க. பொறுபேற்றவுடன் கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு, கடந்த ஆட்சியில் செய்யாததைச் செய்துள்ளனர். முதல்வரை நேரில் சந்தித்து இது குறித்து பேச முடியவில்லை. இந்த போராட்ட களம் மூலம் அவருக்கு கோரிக்கை விடுகிக்கிறோம் மாணவர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT