ADVERTISEMENT

ஹெலிகாப்டர் மூலம் பூ தூவி சசிகலாவை வரவேற்க அனுமதி கேட்டு மனு!

07:19 AM Feb 04, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதல்வராக இருந்தபோது அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகார் மற்றும் வழக்கில் கர்நாடகா நீதிமன்றம், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும், அவரது தோழியான சசிகலாவுக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதேபோல் இளவரசிக்கும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வந்தபோது ஜெயலலிதா மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்துபோனார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்கள். கடந்த வாரம் சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையானார். வரும் 5ஆம் தேதி இளவரசி விடுதலையாகிறார். பிப்ரவரி 7ஆம் தேதி சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூருவில் இருந்து தமிழகம் வருகிறார்கள்.

தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகளை டி.டி.வி.தினகரன் செய்துவருகிறார். பெங்களூருவில் இருந்து நேராக சென்னை செல்கிறார் சசிகலா. தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் சசிகலாவுக்கு அமமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அமமுக நிர்வாகிகளிடம் தினகரன் கேட்டுள்ளார்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும், அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியைப் பறிகொடுத்த ஜெயந்தி பத்மநாபன், பிப்ரவரி 3 ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முக சுந்தரத்திடம் ஒரு மனுவைத் தந்துள்ளார். அதில், ‘சசிகலா தமிழகம் வருவதை முன்னிட்டு, மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்கவுள்ளேன். அப்போது தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்க உள்ளேன். அதற்காக பிப்ரவரி 7 ஆம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை ஹெலிகாப்டர் பறக்க அனுமதி வழங்க வேண்டும்’ எனக் கேட்டு கடிதம் தந்துள்ளார்.

இந்தக் கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கட்டும் என முதல்வர் அலுவலகத்தில் கேட்டுள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர்.

சுதந்தரத்திற்காக பாடுப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையாகி வரும் தலைவரை வரவேற்பது போல், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை தண்டனை முடிந்து, அபராதம் செலுத்திவிட்டு வெளியே வரும் சசிகலாவை வரவேற்க இப்படியெல்லாமா ஏற்பாடு செய்வார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT