sasikala

Advertisment

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. சிறை நிர்வாக முறைப்படி சசிகலாவை அவரது உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்கள் 15 நாளுக்கு ஒருமுறைதான் சந்திக்க முடியும். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்தார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி சசிகலாவுக்கு பிறந்தநாள் என்பதால் அவரை சந்திக்க திட்டமிட்டார் தினகரன். சிறை விதிகள்படி சந்திக்க முடியவில்லை.

ஆகையால் இன்று சிறையில் இருக்கும் சசிகலாவை மதியம் 12 மணிக்கு சந்திப்பதாக இருந்தார். இதற்காக அனுமதி கேட்டிருந்தார். ஆனால் நேற்று சசிகலாவின் உறவினர் ஒருவர் பத்திரிகை வைப்பதற்காக சந்திக்க சென்றிருக்கிறார். இதனால் சசிகலாவை இன்று சந்திக்க முடியாது என்று சிறை நிர்வாகத்திடம் இருந்து தகவல் வந்திருக்கிறது. கிருஷ்ணகிரி வரை சென்ற தினகரனுக்கு இந்த தகவல் கிடைத்ததையடுத்து, அங்கிருந்து சென்னைக்கு திரும்பியுள்ளார்.