ADVERTISEMENT

திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி; உள்நோக்கம் உடையது-பி.ஆர்.பாண்டியன் சாடல்

05:12 PM Jan 18, 2019 | selvakumar

திருவாரூர் திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதியளித்திருப்பது உள்நோக்கம் உடையது என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசையும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் தொடர் போராட்டங்கள் நடத்த போராட்ட குழு அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு கடும் கண்டனம் எழுந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் சார்பில் திருக்காரவாசல் கிராமத்தில் ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில்,

"திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு எதிர்ப்பு போராட்டக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக்குழு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. முதல் போராட்டமாக வருகிற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம், போராட்டக்குழு ஏற்பாட்டின் பேரில் ஏராளமான விவசாயிகள் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈடுபடவுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத் தினத்தன்று தொடர் போராட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும். திருக்காரவாசல் கிராமத்தின் பெரும்பகுதி இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது. விவசாயிகள் குத்தகை அடிப்படையில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பது ஏதோ உள்நோக்கத்தோடு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு சந்தேகம் எழுகிறது. தமிழக அரசு இந்த திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எடுக்க அனுமதிக்க கூடாது என வேண்டுகோளாகவும், எச்சரிக்கையாகவும் தெரிவிக்கின்றோம்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தங்கள் உயிரையும் இழக்க தயாராகி விட்டார்கள். குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் விளைநிலங்களை மாற்றும் திட்டத்திற்கு வேறு திட்டங்களுக்கு வழங்கமாட்டோம் என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என போராட்டம் குழு வலியுறுத்தி உள்ளது, வலியுறுத்தி வருகின்றன."என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT