ADVERTISEMENT

பெரம்பலூர் அரசு கல்லூரி மாணவ மாணவிகள் மறியல் போராட்டம்!!

12:22 PM Jun 18, 2019 | kalaimohan

பெரம்பலூரில் 2006ல் பாரதிதாசன் பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரியாக துவக்கப்பட்டு செயல்பட்டது. ஆண், பெண் என இருபாலரும் படிக்கும் இந்த கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு 24 பாட திட்டங்கள் கொண்டுவரப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. உறுப்பு கல்லூரியாக இருந்ததை இந்த ஆண்டு அரசு கல்லூரியாக மாற்றி உத்தரவிட்டது.

ADVERTISEMENT


இரண்டு ஷிப்ட் முறையில் காலை மதியம் என 3000 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு 24 பாடத்திட்டத்திலிருந்து பிஎஸ்சி மேக்ஸ், பி.சி.ஏ, பி.ஏ ஹிஸ்ட்ரி, MA தமிழ் - ஆங்கிலம், கணக்கு, MPA, MCA. உட்பட 11 பாட திட்டங்களை நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உயர்கல்வித் துறை. இந்த கல்லூரியில் ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பிள்ளைகள் தான் படித்து வந்தனர்.

ADVERTISEMENT


விருப்ப பாடங்களை படிக்ககூடாது என நீக்கியுள்ளது கல்வித்துறை. இதைக்கண்டு கொதித்தெழுந்த மாணவ, மாணவிகள் கல்லூரி அமைந்துள்ள குரும்பலூரில் நேற்று காலை 11 மணியளவில் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் டிஎஸ்பி., ரவீந்திரன் தலைமையில் போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்த கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் ஜானகிராமன் முன்னிலையில் மாணவர்கள் தரப்பில் செந்தில், மணிகண்டன் பிரவீன்-பிரிதா ஆகியோருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்.


அப்போபோது முதல்வர் ஜானகிராமன் நீக்கப்பட்ட பாட பிரிவுகளை சேர்க்க கோரி உயர் கல்விதுறைக்கு கல்லூரி சார்பாக பரிந்துரை செய்யப்படும். அரசு உத்திரவினை எதிர்பார்க்கிறோம் என்றார்.

பாரதிதாசன் பல்கலைகழக கட்டுப்பாட்டில் உள்ள 11 கல்லூரிகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசுகல்லூரிகளிலும் மேற்படி பாடத்திட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நீக்கப்பட்ட பாடங்களை கற்றுத்தரும் கெளரவ பேராசியர்கள் (பெரம்பலூரில் மட்டும் 22 பேர்) பணியை இழக்கப் போகிறார்கள். இதேபோல் தமிழகம் முழுவதும் ஆயிரம் கணக்கானவர்களை அரசு வெளியேற்ற உள்ளது. காரணம் அரசின் நிதிச்சுமை - அடுத்து அரசு கல்லூரியில் படிக்க விருப்பமான பாடங்கள் இல்லை என்பதால், மாணவர்களை தனியார் கல்லூரியை நோக்கி மறைமுகமாக துரத்துகிறது. அரசு தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT