Students protest Misbehaviour complaint against college principal

Advertisment

சேலம் மாவட்டம், கொண்டனாம்பட்டி பகுதியில் செளடேஸ்வரி என்ற தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி மட்டுமல்லாமல், சுயநிதி கல்லூரியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதே போல், 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த கல்லூரியில் முதல்வராக பதவி வகித்து வரும்பாலாஜி என்பவர் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது. குறிப்பாக, இந்த கல்லூரியில் படித்து வரும் பி.எச்.டி மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும்,பாலாஜி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாலாஜி இன்று காலை கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது, அவரை உள்ளே விடாமல் நுழைவு வாயிலை அடைத்து, பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு பயின்று வரும் ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.