perambalur nearest car and lorry incident

Advertisment

பெரம்பலூர் அருகே 22.03.2023 அன்று மாலை சுமார் 3.15 மணி அளவில்லாரியும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். விபத்தில் சிக்கிய 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தம்பை அருகே ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் லாரி மீதுமதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் மோதிய விபத்தில்மதுரை காந்தி நகரை சேர்ந்த மணிகண்டன் மகன் ஷ்யாம் கண்ணன் (வயது 22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படித்து வந்தார். காரில் உடன் பயணித்த மதுரை கே.கே. நகரை சேர்ந்த வாசு மகன் சஷ்வத் (வயது 24), மதுரை மூலக்கரையை சேர்ந்த ஆகாஷ் (வயது 23) மற்றும் அஜய் (வயது 22) ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் கல்லூரி மாணவர்ஒருவர் பலியான சம்பவம்அப்பகுதியில் அதிர்ச்சியையும்சோகத்தையும்ஏற்படுத்தி உள்ளது.