ADVERTISEMENT

வெள்ளத்தில் உடலை தகனம் செய்ய முடியாமல் தவித்த மக்கள்; வீடுதேடி வந்த தகன இயந்திரம் 

10:31 AM Dec 22, 2023 | kalaimohan

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தூத்துக்குடியில் பாளையங்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மையவாடி பகுதியில் கடந்த சில நாட்களாகவே தகனமேடை பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் இறந்தவர்களை தகனம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இறந்த சடலங்களை வைத்துக்கொண்டு உறவினர்கள் மிகவும் அவதிப்பட்டனர். தூத்துக்குடியில் இறப்பவர்களின் உடல் திருநெல்வேலி கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யும் நிகழ்வுகளும் நடைபெற்றது. ஆனால் அதற்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதாக வேதனை தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் கோவையில் இருந்து கேஸ் மூலமாக உடலை எரியூட்டும் இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. சாலையிலேயே வைத்து சடலங்கள் ஏறியூட்டப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு உடலை தகனம் செய்ய முடியும் என அந்த இயந்திரத்தை கொண்டு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இறந்தவர்கள் சடலங்களை அங்கேயே சாலையில் வைத்து தகனம் செய்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT