ADVERTISEMENT

ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு 'கரோனா'-ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு!

06:49 PM May 31, 2020 | kalaimohan

ADVERTISEMENT


கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது ஐந்தாம் கட்ட ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஜூன் 30ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

ADVERTISEMENT


இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,333 என அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 704 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்தம் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்ததால் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் 9,400 பேர் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஒரே நாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை 757 என்ற நிலையில், 12,757 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT