ADVERTISEMENT

'எங்க அப்பா இறந்துட்டாரு போக விட மாட்றாங்க'- கர்நாடக எல்லையில் தவிக்கும் குடும்பத்தினர்

10:46 AM Sep 29, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என டெல்லியில் நேற்று முன்தினம் (26.09.2023) நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதற்கு வலுசேர்க்கும் வகையில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசைக் கண்டித்தும் (29.09.2023) இன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு எல்லையான ஜூஜூவாடி பகுதியில் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து பேருந்துகளும் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. சேலம் கோட்டத்தில் இருந்து 350 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட 80 பேருந்துகள் என மொத்தம் 430 பேருந்துகள் நேற்று இரவே தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதுபோல் தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு சத்தியமங்கலம் பகுதியிலிருந்து கர்நாடக சென்றவர்கள் காரப்பள்ளம் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டனர். அங்கு வந்தவர்களின் தந்தையின் ஈமச் சடங்கிற்கு செல்ல வந்த மகன் மற்றும் 2 மகள்கள், உறவினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் எல்லையிலேயே கண்ணீருடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT