ADVERTISEMENT

இதில் எந்த சமரசமும் இருக்க முடியாது... - ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் 

08:41 PM Jun 19, 2020 | kalaimohan

ADVERTISEMENT

லடாக் எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி மூலமாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பி.எஸ். பங்கேற்றுள்ளார். திமுக சார்பில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, பிஜூ ஜனதா தளம் சார்பில் நவீன் பட்நாயக், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஜெகன்மோகன் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், சமாஜ்வாதி அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி சார்பில் உத்தவ் தாக்கரே ஆகியோர் இந்த காணொலி ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், லடாக் விவகாரத்தில் மத்திய அரசிற்கு தமிழகம் துணை நிற்கும். இந்த விவகாரத்தில் பிரதமர், மத்திய அரசு, ராணுவத்திற்கு தமிழ்நாடு துணை நிற்கும். நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும், இதில் எந்த சமரசமும் இருக்க முடியாது. நாட்டின் ஒரு அங்குல நிலத்தைகூட விட்டுத்தர மாட்டோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு இந்தியரும் நாட்டை பாதுகாப்பார்கள். நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பணியில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம். கரோனா போன்ற தேசிய பேரிடர் நேரத்தில் நாட்டை சிறப்பாக வழி நடத்தும் பிரதமர் மோடிக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT