ADVERTISEMENT

வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க இம்மாதம் முழுவதும் அவகாசம்! 

04:56 PM Nov 13, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 01.11.2021 முதல் 30.11.2021 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 13, 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

01.01.2022 அன்று 18 வயது நிரம்பியவர்கள் (அதாவது, 31.12.2003 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். வெளிநாடு வாழ் வாக்காளர்கள் படிவம் 6A-இல் நேரடியாக வாக்காளர் பதிவு அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளரது பெயரினை நீக்கம் செய்திட படிவம்-7, வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் படிவம் -8, அதே சட்டமன்றத் தொகுதிக்குள் வேறு இடத்திற்கு மாறியிருந்தால், புதிய இடத்தில் வசிப்பவர்கள் படிவம் -8A பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான விண்ணப்பங்கள் 01.11.2021 முதல் 30.11.2021 வரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், (சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் உட்பட) வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் அலுவலகங்களில் உரிய படிவத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்டவர்கள், திருச்சி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம். மேலும், இம்மாதம் 13, 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மற்றும் www.nvsp.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT