தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஒன்றிய கவுன்சிலர், 2 ஊராட்சித் தலைவர், 19வார்டு உறுப்பினர் என24 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான மனு தாக்கல் நேற்று (15.09.2021) தொடங்கிய நிலையில், முதல் நாளான நேற்று லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு குன்னக்குடி கீழத் தெருவைச் சேர்ந்த பீட்டர் செபாஸ்டின் என்பவர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளார். மற்ற பதவிகளுக்கு நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.