ADVERTISEMENT

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான "ஆன்லைன்" விண்ணப்ப விநியோகம் தொடங்கியது !

05:50 PM Mar 18, 2019 | Anonymous (not verified)

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (Tamilnadu Teachers Eligibility Test) "TNTET EXAM - 2019" (28/02/2019) அறிவிப்பாணையை வெளியீட்டது. இந்த தேர்வு "ஆன்லைன்" மூலம் மட்டுமே விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரி :https://trbtet.onlineregistrationform.org/TNTRB/index.jsp , மற்றொரு இணையதள முகவரி : http://trb.tn.nic.in/
இதன் படி ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 15/03/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 05/04/2019 என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும இந்த தேர்விற்கான கட்டணம் ரூபாய் 1000 பொது பிரிவினருக்கு எனவும் , ரூபாய் 500 மற்ற பிரிவினருக்கு தேர்வு கட்டணம் எனவும் தெரிவித்தது. இந்த கட்டணத்தை (Net Banking, Credit Card , Debit Card) மூலம் செலுத்தலாம். இதனை தொடர்ந்து இணைய தள வழியில் விண்ணப்பிப்பது எப்படி ? தொடர்பான முழு வழிகாட்டி நெறிமுறையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு குழுமம் இணையதளத்தில் வெளியீட்டுள்ளது. இந்த தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT


மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண் : 044-28272455 ,7373008144, 7373008134 (நேரம் காலை 10.00AM முதல் மாலை : 5.30 PM வரை இந்த உதவி மையம் செயல்படும்) . அதே போல் உதவி மையம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு https://trbtet.onlineregistrationform.org/TNTRB/index.jsp என்ற இணையதளத்தில் அறியலாம்.

பி.சந்தோஷ் ,சேலம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT