ADVERTISEMENT

திண்டுக்கல்லில் பல்லாரி வெங்காயம் கிலோ நூறு ரூபாய்!!

12:49 PM Nov 05, 2019 | Anonymous (not verified)

மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் பல்லாரி வெங்காயம் வரத்து குறைவால் திண்டுக்கலில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள வெங்காய கமிஷன் மண்டி மார்க்கெட் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் நடைபெறும் இந்த நாட்களில் 50 டன் வரை பல்லாரி விற்பனைக்கு வரும். உள்ளூரில் பல்லாரி சாகுபடி இல்லாததால் மகாராஷ்டிரா கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கிலோ பல்லாரி முப்பது ரூபாய்க்கு விற்றது. சென்ற மாதம் பல்லாரியை பதிக்க வைத்ததால் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததால் விலை அதிகரித்து ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்று வந்தது.

தற்போது மகாராஷ்டிரா கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் பல்லாரி செடிகள் அழுகி வருகிறது. இதனால் பல்லாரிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா மகாராஷ்டிராவில் இருந்து மிக குறைவான அளவே பல்லாரி வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. மொத்த விற்பனை விலை பல்லாரி ஒரு கிலோ 80 முதல் 85 ரூபாய் வரையும் சில்லறைக்கு ஒரு கிலோ 90 முதல் 100 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது.


இது சம்பந்தமாக வெங்காய கமிஷன் மண்டி உரிமையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, "வடமாநிலங்களில் மழை பெய்து வருவதால் வழக்கத்தை விட திண்டுக்கல் வரும் பல்லாரி 25 டன்னுக்கு குறைவாக வருகிறது. அதனால் தான் விலையும் அதிகரித்து உள்ளது இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மேலும் பல்லாரி வெங்காயம் விலை அதிகரிக்கும். இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்" என்று கூறினார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT