Skip to main content

'கணினி வாங்கினால் வெங்காயம் இலவசம்' - வைரல் புகைப்படம் இதோ!

Published on 10/12/2019 | Edited on 11/12/2019

 

வெங்காயத்தை உரிக்காமலேயே கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கும் அளவிற்கு வெங்காயத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவருகிறது. வெங்காய விலை உயர்வு அரசியல் தளத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வெங்காய விலை உயர்வு குறித்து எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது சரமாரியான கேள்விகளை வைத்து வருகின்றன.

 

onion prices-Computer shopஇதையடுத்து வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தவும், வெங்காயத்தின் புழக்கத்தை அதிகரிக்கவும் சில்லறை வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. தற்போது வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது.  

இந்நிலையில் கடலூரில் பிள்ளையார் கோயில் அருகே இயங்கும் கணினி விற்பனைக் கடையின் விளம்பரப் பதாகையில், ஒரு கணினி அல்லது லேப்டாப் வாங்கினால், ஒன்றரை கிலோ கிராம் வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

அண்ணாமலை பல்கலை சார்பில் பழங்குடியின பெண்களுக்கு இலவச கணினி பயிற்சி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
NN

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், கொல்லிமலை இணைந்து இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா உதவியுடன் பழங்குடியின பெண்களுக்கு 3 மாத இலவச கணினி பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்றது.

இந்த பயிற்சித் திட்டத்திற்கு பல்கலைக்கழக முனைவர் பாலமுருகன் வரவேற்றார். கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் என்.புவியரசன் திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில் 'கணினிகள் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இப்பயிற்சி பழங்குடியின பெண்களுக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்க உதவும்' எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பாலமுரளிதர். பழங்குடியின கொல்லிமலை திட்ட அலுவலர் பீட்டர் ஞானராஜ், இந்தத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் ஜெயபிரகாஷ், காளியப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார்கள். முனைவர்கள் பிரவீனா, சாய் லீலா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story

கேட்டாலே கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை - பாமக ராமதாஸ் குற்றச்சாட்டு 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

'Onion price that makes you cry'- Pmk Ramadoss allegesவெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு விலை அதிகரித்து விட்டதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.25 - 30 என்ற அளவில் இருந்த பெரிய வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களில் தான் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. வெங்காயம் அதிகம் விளையும் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

அடுத்த சில நாட்களில் தீப ஒளித் திருநாள் உள்ளிட்ட திருவிழாக்கள் வரவிருக்கும் நிலையில், வெங்காயத்தின் விலை மேலும், மேலும் உயருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ ரூ. 200-ஐ தாண்டியதைப் போன்று  வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ. 150-ஐத் தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. இந்த விலை உயர்வில் இருந்து மக்களைக் காக்கும் மாபெரும் கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

 

bb

 

வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முதல் பணியாகச் சென்னை உட்படத் தமிழ்நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சந்தைகளுக்குக் கொண்டு வருவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் இருந்து கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலமாக வெங்காயத்தை மொத்த விலையில் கொள்முதல் செய்து பண்ணைப் பசுமைக் கடைகள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றின் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நாடு முழுவதும்  வெங்காயத்தின்  விலை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வெங்காயம் முழுவதையும் சந்தைக்கு அனுப்ப வேண்டும். இந்தியாவிலிருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதுடன்,  வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய வேண்டும்.

 

வெங்காயத்தின் விலை நிலையில்லாமல் எட்ட முடியாத உயரத்திற்கு அதிகரிப்பதற்கும், அதலபாதாளத்திற்குத் தாழ்வதற்குக் காரணம் அதற்கான விலை நிர்ணயிக்கப்படாதது தான். எனவே, தேசிய அளவில் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.