ADVERTISEMENT

ஒரு கோடி... ஒரு கிலோ தங்கம்.. ஒரு கிலோ வெள்ளி... –முதல்வர் எடப்பாடி கொடுத்த பரிசு!

08:21 AM May 29, 2019 | kalaimohan

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனது குடும்பத்துடன் ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதிக்கு செல்வது ரகசியமாக வைக்கப்பட்டது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

நடந்து முடிந்த தேர்தலில் சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு அதிக பலம் வரவேண்டும் என்று ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி சென்று முதல்வர் எடப்பாடி வேண்டிக் கொண்டு வந்தார். அதன் பிறகு தேர்தல் முடிந்த பிறகு அவர் எதிர்பார்த்தபடியே அதிமுக ஆட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லாமல் சரிநிகரான அதிக பலம் கிடைத்துள்ளது.


இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி மீண்டும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி தொடர தனது முன்மொழிவை செய்து வந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை தனது குடும்பத்துடன் ஆந்திரா மாநிலம் திருப்பதி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி வெங்கடாஜலபதியை மனம் உருகி வேண்டியதோடு சில வேண்டுதலையும் வைத்துள்ளார்.


இதற்கிடையே ஏற்கனவே ஏழுமலையானை வேண்டியதை நிறைவேற்றுவதாக தனது மனைவியுடன் வந்த உறவினர்களிடம் திருப்பதி உண்டியலில் போடுவதற்காக கொண்டுசென்ற ரூபாய் ஒரு கோடி, மேலும் ஒரு கிலோ தங்கம், ஒரு கிலோ வெள்ளி என அனைத்தையும் திருப்பதி உண்டியலில் செலுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.


நேரடியாக உண்டியலில் செலுத்தவில்லை. அவர் சாமி தரிசனம் செய்த பிறகு அவருக்குப் பின் வந்த அவரது மனைவி உறவினர்கள் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பணத்தையும் பொருள்களையும் உண்டியலில் போட்டு வந்தனர். இதன்மூலமாக எடப்பாடி பழனிச்சாமி இன்னும் இரண்டு வருடம் தனது ஆட்சிக் காலம் நீடிக்கும் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டு வந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT