ADVERTISEMENT

பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் சலசலப்பு...

12:43 PM Mar 24, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அண்மையில், கரோனா இரண்டாம் அலை உருவாகி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதேபோல், கரோனா தொற்றின் இரண்டாவது அலையை நோக்கி இந்தியா பயணிப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தம் கட்சி சார்பில் கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த 18ஆம் தேதி விருதாச்சலம் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து விருதாச்சலத்திலேயே தங்கியிருந்து அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் இன்று (24.03.2021) விருதாச்சலம் தொகுதியில் வாக்கு சேகரிக்க ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்றபோது, அங்கு வந்த சுகாதாரத்துறை அலுவலர்கள், அவரை கரோனா பரிசோதனை செய்துகொள்ள அழைப்பு விடுத்தனர். அதற்கு அவரது கட்சியினர் மறுப்பு தெரிவித்து, தற்போது வர முடியாதென சுகாதாரத்துறை அலுவலர்களிடத்திலே தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜய்காந்த் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

கடந்த 18ஆம் தேதி பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அவருடன் வந்த எல்.கே.சுதிஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவுக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் அவர்களுடன் இருந்தவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை எடுப்பது வழக்கம். அதனடிப்படையில் இன்று பிரேமலதா விஜயகாந்திற்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் நேரில்வந்து அழைப்பு விடுத்தனர். ஆனால், தேமுதிக கட்சியினர் அதனைத் தடுத்து, ‘நீங்கள் எங்கள் பிரச்சார நோக்கத்தை திசை திருப்புகிறீர்கள், தற்போது வர முடியாது. மாலை பார்த்துக்கொள்ளலாம்’ என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT