தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம்,கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனதீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால்கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம்,வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.
அதிமுககூட்டணியில் பாமகவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்பாஜகவுடனும், விஜயகாந்தின் தேமுதிகவுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் அதிமுகஈடுபட்டுவருகிறது.சிலதினங்களுக்கு முன்புஅமைச்சர்கள், தேமுதிகதலைவர் விஜயகாந்தை அவரதுஇல்லத்திற்குச் சென்றுநேரில்சந்தித்திருந்த நிலையில், மீண்டும் அமைச்சர் தங்கமணி இல்லத்தில்தேமுதிகநிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்தப் பேச்சுவார்த்தையில் தேமுதிக, அதிமுகவிற்கு இரண்டு ஆப்ஷன்களைக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆப்ஷன் 1: பாமாவிற்குஒதுக்கப்பட்டது போல் 23 தொகுதிகள்வேண்டும்.ஆப்ஷன் 2:இருபது தொகுதிகளுடன் ஒரு நாடாளுமன்றதொகுதியைஒதுக்க வேண்டும் எனக் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிமுகசார்பில்12 தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக, தற்போது வரை பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
முன்னதாக தேமுதிகதலைவர் விஜயகாந்தை அவரதுஇல்லத்திற்குச் சென்று அமைச்சர்கள் நேரில் சந்தித்தநேரத்தில், பிரேமலதாவிஜயகாந்த் விழுப்புரத்தில் கட்சி நிகழ்ச்சியில் இருந்ததால், அவருக்குத் தொலைபேசியில்12 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் நேரில் வந்து பேசிக்கொள்வதாக பிரேமலதாவிஜயகாந்த் கூறியதாகக் கூறப்பட்டது.இதனையடுத்தே தேமுதிகநிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நடந்த பேச்சுவார்த்தை குறித்துபிரேமலதாவிற்கு தேமுதிக நிர்வாகிகள் தொலைபேசியில் தகவல் தெரிவித்திருந்த நிலையில், ‘பாமகவிற்கு கொடுக்கும்முக்கியத்துவத்தை தங்களுக்கு கொடுக்கவில்லை. தமிழ்நாடு முழுக்கநமக்குகிளைக் கழகம்,பூத் கமிட்டிஉள்ளது’ எனபிரேமலதாதெரிவித்ததாககூறப்படுகிறது.
இந்நிலையில், ‘விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலையில், உங்களுக்கு வாக்குவங்கி அதிகம் கிடைக்காது. எனவே 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது’ என அதிமுகதரப்பு கூறியதாகவும், இதனால்அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று (01.03.2021) காலைஅமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தையைதேமுதிகவினர் தவிர்த்ததாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளன.
தற்பொழுது சென்னையில்தேமுதிகபொருளாளர் பிரேமலதாதலைமையில் தேமுதிக கட்சிநிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கூட்டணிக்கு அழைக்காவிடில் தனியாகத்தேர்தலைச் சந்திக்கும் பலமும், போட்டியிடுவதற்கான வேட்பாளர்களும் தேமுதிகவில் உள்ளனர் எனமுன்னரேபல செய்தியாளர் சந்திப்புகளில் பிரேமலதாவிஜயகாந்த் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.