ADVERTISEMENT

வெளுத்துவாங்கிய வடகிழக்கு பருவமழை! பயிர் சேதங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள்! 

11:40 AM Nov 16, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (14.11.2021) இரவு 11 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இரவு முழுவதும் விட்டுவிட்டு பெய்த மழை, அதிகாலை 5 மணிவரை நீடித்தது. இந்த மழையால் திருச்சி பாலக்கரை காந்தி மார்க்கெட், உறையூர் கருமண்டபம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. திருச்சியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் உறையூரில் லிங்கா நகர், செல்வா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கியது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் சேதமடைந்தன. திருச்சி மாவட்டத்தில் சேதமடைந்த பயிர்களின் விவரம் குறித்து தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணி நடத்திவருகின்றனர். இதில், 140 ஏக்கர் நெற்பயிர்கள் 10 ஏக்கர் கடலை பயிர்கள் என மொத்தம் 550 ஏக்கர் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT