ADVERTISEMENT

'நிவர்' புயல்: 'சென்னையில் விழுந்த 223 மரங்கள் அகற்றம்'!

09:45 AM Nov 26, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் திருவள்ளூர் ஆரணி ஆற்றில் அருகே உள்ள ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி ஆகிய பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் இருபுறம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'நிவர்' புயல் கரையைக் கடந்தால் சென்னையில் மாநகர பேருந்துகள் குறைந்த அளவிலே இயக்கப்படுகின்றன. சென்னை அருகே ஊரப்பாக்கம், சேலையூரில் வெள்ள நீர் தெருவுக்குள் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

புயல் கரையைக் கடந்தபோது 120 கி.மீ., முதல் 145 கி.மீ., வரை சூறாவளி காற்று வீசியதால் சென்னை, கடலூர், புதுச்சேரியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் 267 மரங்கள் சாய்ந்த நிலையில் 223 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 60 மரங்கள் சாய்ந்த நிலையில் 45 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல் அடையாறு மண்டலத்தில் 59 மரங்கள் சாய்ந்த நிலையில் 48 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT