வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புஇருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

weather

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதிகபட்சமாக நடுவட்டம், தேவாலா பகுதியில் தலா 4 சென்டி மீட்டர் மழையும், வால்பாறை,காஞ்சிபுரத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழைப்பதிவு செய்யப்பட்டுள்ளது.