ADVERTISEMENT

'இரவில் அரசு பேருந்துகள் ஓடாததால் ரூபாய் 15 கோடி இழப்பு'- போக்குவரத்துறைச் செயலாளர் தகவல்!

12:36 PM Apr 21, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் இரவு ஊரடங்கு காரணமாக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் ரூபாய் 12 கோடி முதல் ரூபாய் 15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பகல் நேரத்தில் நேற்று மட்டும் 16,284 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 2,790 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 70,000 அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கரோனா தடுப்பூசிப் போடப்படும். அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தடுப்பூசிப் போட வேண்டும் என்று கட்டாயமில்லை. இவ்வாறு தமிழக அரசு போக்குவரத்துச் செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT