ips officers transfer tamilnadu government order

மாவட்ட எஸ்.பி.க்கள், மாநகர காவல் துணை ஆணையர்கள் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையர் ராஜசேகரன், சென்னை தலைமையக காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட எஸ்.பி.யாக பி.ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தலைமையக காவல் துணை ஆணையர் விமலா, நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார், சென்னை கணினி மயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலக நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு, டி.ஜி.பி. அலுவலக ஏ.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டி.ஜி.பி. அலுவலக ஏ.ஐ.ஜி. சாம்சன், உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் சுந்தர வடிவேல், திருப்பூர் மாவட்ட துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

உயர்நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவின் உதவி ஐ.ஜி.யாக சுதாகர் மாற்றப்பட்டுள்ளார்.