ADVERTISEMENT

நெல்லை மாவட்டத்தில் முதன்முறையாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் பணியிடை நீக்கம்

07:48 PM Feb 10, 2019 | paramasivam

ADVERTISEMENT

நெல்லை மாவட்டத்தின் சுகாதாரத்துறை இணை இயக்குநராக இருந்தவர் இளங்கோவன். நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகமும் இவரது நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இவருக்கான அலுவலகம் தென்காசியில் உள்ளது. மாவத்தில் உள்ள மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி மாறுதல் பொறுப்புகளும் இவரது நிர்வாகத்தில் இருக்கிறது. அத்துடன், தனியார் எம்.ஆ.ஐ., மற்றும் சிடி ஸ்கேன் போன்றவைகள் அமைக்க வேண்டும் என்றால் இவரிடம் முன் அனுமதி பெற வேண்டும். உரிய ஆவணங்கள் இவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பிறகே அந்த ஸ்கேன் செண்டர்கள் செயல்பட முடியும்.

ADVERTISEMENT

இந்த மாதம் 28ம் தேதி இவரது பணி முடிகிற நிலையில் இன்று காலை அதிரடியாக இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாநில சுகாதாரத்துறையின் இயக்குநர் அலுவலகம் இவர் மீது இன்று திடீர் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், பணியிடை நீக்கத்திற்கான காரணங்கள் சொல்லப்படாத நிலையில் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிப்பது என்னவென்றால், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இடமாறுதல் , ஸ்கேட்ன் செண்டர்கள் அமைப்பது, அதற்கு உரிய அங்கீகாரம் கொடுப்பது போன்றவைகளில் இடைத்தரகர் மூலமே செயல்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக முறைகேடுகள் நடந்ததாக அரசுக்கு புகார்களும் சென்றுள்ளன. இந்நிலையில், தனியார் ஒருவரது ஸ்கேன் செண்டர் விற்பனையில் இணை இயக்குநர் அதற்கான ஆவணங்களை ஒப்புதல் அளிக்காமல் மாறாக அந்த ஸ்கேன் எந்திரத்தை பறிமுதல் செய்திருக்கிறார். இது போன்ற சம்பவங்களால் இவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு காரணம் என்கிறார்கள்.


நெல்லை மாவட்டத்தில் இதுவரை சுகாதாரத்துறை இணை இயக்குநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது இல்லை. முதன்முறையாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் பணியிடை நீக்கம் என்பதால் பரபரப்பாக பேசப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT