
நெல்லை அருகே வேன் கவிழ்ந்து 26 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு வேனில் சென்றவர்கள் ரெட்டியார்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தின் டயர் வெடித்து வேன் நடு சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 26 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்களை நெல்லை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் ஜேசிபிகொண்டு சாலையில் கவிழ்ந்த வாகனமானது அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)