ADVERTISEMENT

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட்... இந்த ஆண்டே நடைமுறை!

12:50 PM May 31, 2019 | kalaimohan

மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவ கலலூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட சேர்க்கைக்கான நீட் தேர்வு நடந்து முடிந்து முடிவுகளுக்காக மாணவர்கள் காத்துக்கொண்டிக்கின்றனர்.

ADVERTISEMENT

சித்தா, ஆயுர், யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து ஒரு வருடம் தமிழகம் விலக்கு பெறப்பட்டிருந்த நிலையில் சென்ற வருடம் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில் சித்தா, ஆயுர் படிப்புகளுக்கு இந்த வருடமே நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் கட்டாயம். யோகா நேச்சுரல் படிப்புக்கு மட்டும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்ற வருடம் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்ற நிலையில் இந்த வருடமும் 12 ஆம் மதிப்பெண் அடிப்படையில் சித்தா படிக்கலாம் என நினைத்து நீட் தேர்வெழுதாத மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த தகவல்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT