Skip to main content

இன்று நீட் தேர்வு... விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும்

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 155 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது. 15 லட்சம் மாணவ மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

 

neet

 

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உட்பட 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டுகளில் காலையில் நீட் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் வெளி ஊரிலிருந்து வரும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று சேர்வதில் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு மற்றும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு பிற்பகலில் தேர்வு நடத்தப்படுகிறது.

 

நீட் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வெளியிடப்படும் என தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு இன்று பிற்பகல்  2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் பிற்பகல் 12 மணிக்கு தொடர்புடைய தேர்வு மையங்களுக்கு வந்துவிடவேண்டும். பிற்பகல் 1 மணிக்கு கேட் மூடப்படும்.

 

neet

 

தேர்வு மையத்துக்கு நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஹால்டிக்கெட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து எடுத்து வர வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவிட்ட பாஸ்போர்ட் புகைப்படம் சுய அடையாள ஆவணங்களை எடுத்து வரவேண்டும்.

 

 தேர்வு எழுத பால்பாயிண்ட் பேனா 1 தேர்வு மையத்தில் வழங்கப்படும். ஜியோமெட்ரி பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் உள்ளிட்ட எந்த பொருளுக்கும் அனுமதி கிடையாது. 

மொபைல் போன், ப்ளூடூத், பென்டிரைவ், கைகடிகாரம், கை கேமரா, காதணி, வளையல் இது போன்ற ஆபரணங்களுக்கும் தேர்வு அறைக்குள் அனுமதி இல்லை.

 

neet

 

நீரிழிவு நோயுள்ள  தேர்வர்கள் மாத்திரைகள், பழங்கள் வெளியில் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்களை எடுத்து வரலாம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சாக்லேட், சாண்ட்விச் உள்ளிட்டவற்றை எடுத்து வர அனுமதி இல்லை. 

 

மென்மையான நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும் மாணவர்கள் அரைக்கை சட்டை அணிய அனுமதி உண்டு. முழுக்கைச் சட்டை அணியக்கூடாது.

 

கலாச்சாரம் சார்ந்த உடைகள் அணிந்து வருபவர்கள் 12 மணிக்கு முன்பே தேர்வறைக்கு சோதனைக்காக வரவேண்டும். மூடப்பட்ட தனி அறையில் அவர்களுக்கு சோதனை நடத்தப்படும் தேர்வு மையத்துக்குள் காலணிகள் அணியக்கூடாது. செருப்பு மட்டும் அணியலாம் உயர்ந்த குதி உயர்ந்த செருப்புகளை அணியக் கூடாது. 

 

தேர்வு முடிவதற்கு முன்பு யாரும் வெளியில் செல்ல அனுமதி இல்லை. தேர்வு முழுவதும் சிசிடிவி கேமரா மூலமும் வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கப்படும். தேர்வு மையத்தில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

தந்தை உயிரிழப்பு;துயரத்திலும் துவண்டுவிடாமல் தேர்வெழுதிய மகள்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Daughter who has written class 12 exam

தந்தை உயிரிழந்த நிலையில் மகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தின வடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16). இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.  

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுதச் செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.