அண்மையில் நடந்த மருத்துவ தகுதி தேர்வான நீட் தேர்விற்கு பல எதிர்ப்புகள் ஏற்கனவே தமிழகம் முழுவதும் வலுத்து வந்தன. ஏற்கனவே அனிதா என்ற மாணவி இந்த தேர்வினால் தற்கொலை செய்துகொண்டதிலிருந்து எதிர்ப்புகள் அதிகரித்தது இப்படி இருக்க நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதிலும், தேர்வு எழுதும்பொழுது நடத்தப்படும் சோதனைகள்சில நடைமுறை கஷ்டங்களை கடந்த ஆண்டுகளில்தமிழக மாணவர்கள் எதிர்கொண்டனர். தற்போது இந்த வருடம் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார்.

neet

இந்நிலையில் நீட் மீதான எதிர்ப்பு மீண்டும் வலுத்துள்ளது. இதனை தொடர்ந்துநீட் தேர்வுக்கு எதிராகவும், பிரதீபா மரணத்திற்கு நியாயம் கேட்டும் சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மறியல் செய்த இந்திய மாணவர் சங்கத்தை (எஸ்எப்ஐ) சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்து Cr no 171/0018, U/S 143,147,148,188, r/w 353 7(1)(A) CLA act உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு அழைத்து சென்று கொண்டுள்ளனர்.

Advertisment

neet

Advertisment

neet

கைது செய்யப்பட்டவர்கள் விவரம் வீ. மாரியப்பன், க.நிருபன், ஆ.இசக்கிராஜ், சு.சுபாஷ் சுஹப், முகைதீன், லோ,விக்னேஷ், என்.ராஜேந்திரபிரசாத், அ.பிரபாகரன்,ஜெ.ஜெய், ரா.தீப்க், செ.உக்கிரபாரதி என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.