ADVERTISEMENT

நீட் பயிற்சியில் குறைபாடு - கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு

06:46 PM Nov 05, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முறையாகப் பயிற்சி கொடுக்காத நீட் பயிற்சி மையம் ஒன்றுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டம் புலி வலத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் பிரபல தனியார் நீட் பயிற்சி மையத்தில் நீட் வகுப்புக்காகச் சேர்ந்துள்ளார். மேலும் அந்த நிறுவனம் கட்டணமாக அவரிடம் ரூபாய் 73,797 பெற்றுள்ளது. பணத்தைப் பெற்றுக்கொண்ட மையம் தனக்கு முறையாக நீட் பயிற்சி அளிக்கவில்லை என்று கூறி அந்த மாணவர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளது. அதில் மாணவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 25 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 6 மாதத்திற்குள் மாணவரிடம் வழங்க வேண்டும் என்று பயிற்சி மையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT