ADVERTISEMENT

கப்பலில் தென்னங்கன்றகள் கொண்டு வருவேன் என்று நிர்மலா சீத்தாரமன் சொன்னாரே கொடுத்தாரா? மா.சு. கேள்வி

10:00 AM Feb 27, 2019 | bagathsingh

ADVERTISEMENT

நெடுவாசலில் பசுமை சைதை இயக்கத்தின் சார்பில் தென்னை, மற்றும் மாங்கன்றுகள் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் கப்பலில் தென்னங்கன்றகள் கொண்டு வந்து தருவேன் என்று சொன்னாரே கொண்டு வந்து கொடுத்தாரா? என்று முன்னாள் மேயர் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் கஜா புயலில் மரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கடந்த மாதம் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ முத்துக்குமரன் அறக்கட்டனை சார்பில் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதே போல அந்த அறக்கட்டளையின் கோரிக்கையை ஏற்று பசுமை சைதை இயக்கத்தின் சார்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெடுவாசல் கிழக்கு, மேற்கு, புள்ளாண்விடுதி ஊராட்சி விவசாயிகளுக்கு ரூ. 20 லுட்சம் மதிப்பிலான 10 ஆயிரம் தென்னங்கன்றகள் மற்றும் 2 ஆயிரத்தி 500 உயர் ரக ஒட்டு மாங்கன்றுகள் வழங்கும் விழா திருமயம் எம்.எல்.ஏ ரகுபதி தலைமையில் எம்.எல்.ஏ க்கள் ஆலங்குடி மெய்யநாதன், புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு ஆகியோர் முன்னிலையில் நடந்தது. சென்னை முன்னாள் மேயரும், பசுமை சைதை இயக்கத்தின் தலைவருமாக மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மா.சுப்பிரமணியன், புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி விவசாயிகளுக்கு ராணுவக் கப்பல் மூலம் அந்தமானில் இருந்து தென்னங்கன்றுகள் கொண்டு வந்து வழங்கப்படும் என்று நெடுவாசலுக்கு வந்து வாக்குறுதி அளித்தார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆவர் சொன்ன தென்னங்கன்றுகள் வந்தததா? புhதிக்கப்பட்டுள்ள மக்களை ஏமாற்றி சென்றுவிட்டார்.


நெடுவாசல் மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கவில்லை என்பதற்தாக இந்தப் பகுதியை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன. ஆனால் இந்த மக்கள் கடுமையான போராட்டத்தால் ஜெம் நிறுவனம் ஓடிவிட்டது. அதனால் இந்த மண்ணை வணங்கி மரக்கன்றுகள் கொடுப்பதில் பெருமை அடைகிறோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 64 வது பிறந்த நாள் முதல் மரக்கன்றுகள் நடுவதாக ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதாக 7 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவினர் தெரிவித்தனர். இதற்காக அரசு நிதியில் இருந்து ரூ.100 கோடி செலவிடப்பட்டுள்ளதே தவிர, மரங்கள் இல்லை. ஒரு லட்சம் மரங்கன் வளர்க்கப்பட்டுளை காட்ட முடியுமா? வளர்த்திருந்தால் தானே காட்ட முடியும்.


இப்பகுதி விவசாயிகளை பார்க்கும் போது மரங்கள் வளர்ப்பத்தில் ஆர்வமாக உள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. அதனால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஜூன் மாதம் இந்தப் பகுதிக்கு கூடுதலாக 20 ஆயிரம் மாங்கன்றுகளை பசுமை சைதை இயக்கம் மூலம் வழங்கப்படும் என்றார்.


இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக அரசிடம் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை. அதாவது கடந்த ஆண்டு கல்குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை குடிநீராக பயன்படுத்தலாம் என்று சொன்னார்கள். பிறகு அந்த தண்ணீர் குடிக்க தகுதியற்ற தண்ணீர் என்று திட்டத்தை நிறுத்தினார்கள். ஆனால் கடந்த ஆண்டு தகுதியற்ற கல்குவாரி தண்ணீர் இந்த ஆண்டு எப்படி தகுதியுள்ளதாகும். மறுபடியும் கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரை குடிநீராக பயன்படுத்துவோம் என்கிறார்கள்.

திருவிழாக் கூட்டத்துக்குள் பிள்ளைகளை பிடிக்கும் கூட்டமாக மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் வருவார் என்று திமுக தலைவரை அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்திருக்கிறார். அவரை பிடிப்பதற்கு தான் சிபிஐ தேடிக்கொண்டு இருக்கிறது என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மத்தியில் திமுக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் போன்ற மண்ணை மலடாக்கும், மக்களை வஞ்சிக்கும் அனைத்து திட்டங்களையும் ரத்து செய்யப்படுவதோடு கர்நாடகாவில் காவிரி ஆற்றில் அணை கட்டுவது தடுக்கப்பட்டு கல்லணைக் கால்வாயின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT